பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த நடிகை சிருஷ்டி டாங்கே கடைசி நேரத்தில் விலகியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னையில் பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார் பிரபுதேவா. அதில் பல நடிகைகள், நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களில் சிருஷ்டி டாங்கேவும் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
மரியாதை இல்லாத இடத்தில் தனது திறமையை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.