ZEEதிரை ஸ்டார்ஹப்பில் அறிமுகம்

ZEEதிரை ஸ்டார்ஹப்பில் அறிமுகம்

1 mins read
f4e5112e-9d08-4b7f-926d-4c1f27912873
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் சமீபத்தில் வெளிவந்த புத்தம்புதிய திரைப்படங்கள் 'ZEEதிரை'யில் காணலாம். படம்: ஸ்டார்ஹப் -
multi-img1 of 3

ஸ்டார்ஹப்' (Starhub) தொலைதொடர்பு நிறுவனம் புதிய தமிழ் ஒளிவழியை (‌channel) மார்ச் 27ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக இந்த ஒளிவழி சிங்கப்பூரின் 'ஸ்டார்ஹப் கேபல் டீவி'யில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.

'ZEEதிரை' எனும் இப்புதிய ஒளிவழி, சினிமா பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஏனெனில் 24 மணி நேரமும் தமிழ் திரைப்படங்கள் அதில் ஒளிபரப்பாகும்!

'ஸ்டார்ஹப்' இந்தியன் 'எண்டர்டேன்மன் பாஸ்' அல்லது தங்கம் மிகை 'பேக்' வாடிக்கையாளர்கள் இந்த ஒளிவழிக்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9.30மணிக்கு திரையரங்குகளில் சமீபத்தில் வெளிவந்த புத்தம்புதிய திரைப்படங்கள் 'ZEEதிரை' ஒளிவழியில் இடம்பெறும்.

மேல் விவரங்களுக்கு, www.starhub.com/indian-entertainment எனும் இணையப் பக்கத்திற்கு செல்லவும்.