இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வரலாறு ‘வீரமங்கை வேலு நாச்சியார்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
ஜெ.எம்.பஷிர் தயாரிக்கும் இப்படத்தை ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ் இயக்குகிறார்.
வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் ஆயிஷா என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார்கள். இவர் தயாரிப்பாளர் பஷிரின் மகள்.
வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி, 4ஆம் தேதியன்று இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் லண்டனில் நடத்த உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.
தனது மகள் ஆயிஷா திரை உலகில் அறிமுகமாவதும் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிப்பதும் மிகுந்த பெருமை அளிப்பதாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் பஷிர்.
“வரலாற்று ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்து இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வேலு நாச்சியாரின் பிறந்தநாளையொட்டி வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி,” என்றும் சொல்கிறார் பஷிர்.

