வரலட்சுமி: சசிகுமார் என்னிடம் அவதிப்பட்டார்

1 mins read
06b95084-c0b3-4c0c-8343-c256394c1b5e
-

'தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமியின் ஆட்டம் பெரிதாக பேசப்படும். ஏனென்றால் இந்தப் படத்திற்காக அவர் ஆடிய ஆட்டம், அவ்வளவு சாதார ணமானது அல்லவாம். "இப்படியொரு கதையை முடிவு செய்த பாலா அதில், 'நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று 'பிதாமகன்' சங்கீதாவிடம் கூறினாராம். என்னைச் சந்தித்த சங்கீதா, 'உனக்கு இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறதா?' என்று கேட்டார். அதன் பிறகு நான் பாலாவைச் சந்தித்தேன்.

"இந்தப் படத்திற்காக ஒரு மாதம் பயிற்சி எடுத்துக் கொண் டேன். அதன் பிறகுதான் படப் பிடிப்புக்கு போனோம். அதனால் பாலா சார் எதிர்பார்த்த அளவு என்னால் நடனமாட முடிந்தது. "மிகப்பெரிய இயக்குநரின் படத்தில் நடித்தது மறக்க முடியாத, பெருமை தரக்கூடிய விஷயம்," என்கிறார் வரலட்சுமி. "நடன இயக்குநர் கலா, பிருந்தா இருவரும் இல்லா விட்டால் என்னால் அந்தளவுக்கு நடனம் ஆடியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

அவர்கள் இருவரும்தான் எனக்கு நன்றாகப் பயிற்சி அளித்தார்கள்," என்று கூறும் வரலட்சுமிக்கு இந்தப் படத்தில் ஒரு சங்கடம். ஆனால் வேறு வழியில்லை.