சிறந்த படம் 'கிருமி'

சிறந்த படம் 'கிருமி'

1 mins read
534ecdfd-735f-4c6d-88eb-1dc8b86f7dac
-

சென்னையில் நடைபெற்ற 13-வது அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக "கிருமி' தேர்வு செய்யப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் நடுவர்களின் சிறந்த விருதை 'ரேடியோ பெட்டி' படம் பெற்றது. திரைப்பட விழாவின் சிறந்த இரண்டாவது படமாகவும் அப்படம் தேர்வானது. சிறந்த நடிகைக்கான விருது 'தனி ஒருவன்', 'மாயா' படங்களில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது 'தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமிக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் வழங்கப்படும் விருதையும் நடிகை நயன்தாரா பெற்றார். உலகத் திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, தமிழில் வெளிவந்த சிறந்த படங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழா, 13-ஆம் ஆண்டாக கடந்த 6-ஆம் தேதி சென்னையில் தொடங்கி 13ஆம் தேதி நிறைவடைந்தது.

'கிருமி' படத்தில் கதிர், ரேஷ்மி மேனன்.