ஆனந்தி: நல்ல பெயரே இலக்கு

ஆனந்தி: நல்ல பெயரே இலக்கு

1 mins read
3f99a13f-93b3-4c69-93c0-c3f711ff1998
-

"இந்தப் புத்தாண்டின் முதல் நாளே எனக்கு அமர்க்களமாக அமைந்தது. இப்படியொரு புத்தாண்டைக் கொண்டாடியதே இல்லை. ஜி.வி.பிரகா‌ஷுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில்தான் புத்தாண்டைக் கொண்டாடினேன். புத்தாண்டு தினம் படப்பிடிப்புடன் தொடங்கியதால் உற்சாகமாக உள்ளது," என்று கொஞ்சும் தமிழில் ஆனந்தம் குழைகிறார் இளம் நாயகி ஆனந்தி. 'திரிஷா இல்லன்னா நயன்தாரா'விற்கு பிறகு தமிழில் 'விசாரணை', 'ஃபைசல்', 'பண் டிகை' என ஆனந்திக்கு கைநிறைய படங்கள். 2016 எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

"கடந்த 2014 டிசம்பர் கடைசியில் 'கயல்' படம் வெளியானது. 2015ல் எனக்கு அதர்வா, தினேஷ், ஜி.வி.பிரகாஷ் என நல்ல கதாநாயகர் களுடன் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. எனவே ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தேன். "அதேபோல் இந்தப் புத்தாண்டிலும் கைவசம் சில படங்கள் உள்ளன. எனவே நிச்சயமாக இது எனக்கான ஆண்டுதான். "எல்லா படங்களுமே வெற்றிபெற வேண்டும் என்கிற பெரிய ஆசை உள்ளது. அதையும் கடந்து இன்னொரு விருப்பம் என்றால், பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதுதான்."

எப்படிப் போகிறது உங்களுடைய படிப்பு? "பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு ஆடை அலங்காரப் பயிற்சி வகுப்பில் சேர்ந் தேன். அத்துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி படப்பிடிப்பு குறுக்கிட்டதால் பயிற்சியை சரிவர முடிக்க இயலவில்லை.