மூன்று இளையர்கள் ஏமாறும் கதையைச் சொல்லும் 'பட்டய கிளப்பும் பசங்க'

மூன்று இளையர்கள் ஏமாறும் கதையைச் சொல்லும் 'பட்டய கிளப்பும் பசங்க'

1 mins read
ad58c1b3-1b81-4725-9d74-523e0a42d15f
-

இயக்குநர் வினயனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனூப்ராஜ் தமிழில் இயக்கும் படம் 'பட்டய கிளப்பும் பசங்க'. இதில் மூன்று நாயகர்கள், நாயகிகள் அறிமுகமாகிறார்கள். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், 'நியூ செந்தில்' பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். "சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்வதை எல்லாம் கேட்டு இலக்கின்றி செயல்பட்டு வாழ்க்கையை தொலைக்கும் மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை இது.

பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும் கடன் வாங்கிய பணத்தையும் மூவரும் பறிகொடுக்கிறார்கள். "இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் அவற்றில் இருந்து மூவரும் மீண்டனரா என்பதையும் நகைச்சுவை கலந்து சொல்லப் போகிறோம். அதேசமயம் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது," என்று உத்தரவாதம் அளிக்கிறார் அனூப்ராஜ்.