கார்த்தி நடிக்கும் 'தோழா' மார்ச் 25ஆம் தேதி வெளியீடு

கார்த்தி நடிக்கும் 'தோழா' மார்ச் 25ஆம் தேதி வெளியீடு

1 mins read
a7f7a7bf-3e4c-4654-9c56-5c950e120617
-

வம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி, தமன்னா நடித்துவரும் 'தோழா' திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். 'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி, 'காஷ்மோரா', 'தோழா' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு முழுமையடையாததால் எப்போது வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், 'தோழா' திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படம் தமிழில் 'தோழா' என்ற பெயரிலும் தெலுங்கில் 'ஓப்பேரி' என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது.