குணச்சித்திர நடிகை கல்பனா திடீர் மரணம்

குணச்சித்திர நடிகை கல்பனா திடீர் மரணம்

1 mins read
e3852906-69a7-4415-b2df-45880899871a
-

பிரபல குணச்சித்திர நடிகை கல்பனா நேற்று திடீரென மரணமடைந்தார். இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார். கேரள மாநிலம் திருவனந்த புரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாளப் பட உலகில் 'திக் விஜயம்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அன்று தொடங்கிய அவரது கலைப்பயணத்தின் வழி ஏராள மான படங்களில் தோன்றி, தனது குணச்சித்திர, நகைச்சுவை நடிப் பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 1983ல் பிரபல மலையாளக் கதாசிரியர் வாசுதேவ நாயரின் 'மஞ்சு' (மூடுபனி) என்ற மலை யாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வகையில் பிரபலமானார் கல்பனா. அதன் பிறகு நகைச்சுவை வேடங்களில் கவனம் செலுத்தினார்.

'தனிச்சு அல்ல நான்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் கல்பனா. தமிழில் பாக்கியராஜ் ஜோடியாக 'சின்னவீடு' என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 'சதிலீலாவதி', 'பம்மல் கே. சம்பந்தம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் உள்பட பல மொழிப்படங் களிலும் நடித்து வந்தார்.