நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது

நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது

1 mins read
101745cf-1d3b-4cae-b31c-8f30bd459b36
-

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (படம்) இந்தியா வின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப் படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள 65 வயதான ரஜினி கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரிலையன்ஸ் நிறு வனர் மறைந்த திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட மேலும் சிலரும் பத்ம விபூஷண் விருது பெறுகின்றனர். விளையாட்டு நட்சத்திரங்கள் சாய்னா நேவால், சானியா மிர்சா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.