சக கலைஞர்களைப் பாராட்டிய அனுஷ்கா

சக கலைஞர்களைப் பாராட்டிய அனுஷ்கா

1 mins read
c28bdf1a-8d84-417e-9d50-22a4db36af47
-

அனைத்துலக இந்திய திரைப்பட அகாடமி கடந்த 15 ஆண்டுகளாக இந்திப் படங்களுக்கான விருது வழங்கும் விழாவை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது. இப்போது முதன்முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென் இந்தியப் படங்களைக் கொண்டாடும் வகையில் 'ஐபா உற்சவம்' என்ற பெயரில் விழா நடத்துகிறது. இந்த 'ஐபா உற்சவம்' படவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான 'பாகுபலி' சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

படத்தில் நடித்த சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் விருது பெற்றனர். இந்தப் படத்துக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன. 'நின்னு', 'என்னுண்டே மைதீன்', 'பிரேமம்' ஆகிய படங்கள் தலா 5 விருதுகளைப் பெற்றன. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அனுஷ்கா, விருது பெற்றவர்களை உடனடியாகத் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டாராம்.