இளம் நாயகி கேத்ரினின் லட்சியம்

1 mins read
ef398f37-f4f8-4cdf-a263-45404205914f
-

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்கிறார் இளம்நாயகி கேத்ரின் தெரசா. "அண்மையில் வெளியான 'கதகளி'க்குப் பிறகு 'கணிதன்', 'வீரதீரசூரன்' என்று வரிசையாக தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. இனி இடைவெளியே இருக்காது. "நேரம் கிடைக்கும்போது நல்ல புத்தகங்கள் படிப்பேன், தொலைக்காட்சி பார்ப்பேன். மற்றபடி பொழுதுபோக்குவதற்கு நேரமே இருக்காது. எப்போதாவது சமையல் செய்வேன்.

"நடிகர் விஷால் நல்ல உழைப்பாளி. நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவார். நல்ல நடிகர். நான் முடிந்தவரை ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமாக நடிக்க முயற்சி செய்வேன். ஒரே மாதிரி நடிப்பதைத் தவிர்ப்பேன். என் அம்மா துபாயில் இருக்கிறார். அப்பா எனக்கு உதவியாக வருகிறார். தற்போது ஹைதராபாத்தில் தங்கி இருக்கிறேன். நடிகைகளில் முதல் இடம், இரண்டாவது இடம் என்ற கவலை இல்லை. என் படங்கள் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். இதுதான் என் லட்சியம்," என்கிறார் கேத்ரின்.