வெளி நிறுவன படத்தில் உதயநிதி

வெளி நிறுவன படத்தில் உதயநிதி

1 mins read
d8fc1503-b12e-4251-a198-5e4e341701e6
-

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' முதல் கடைசியாக அவர் நடித்த 'கெத்து' படம் வரை அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனமே தயாரித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், தற்போது இவர் நடித்து வரும் 'மனிதன்', அடுத்து நடிக்க இருக்கும் சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ஆகியவற்றையும் உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்கிறார். ஆனால், தற்போது முதன்முறையாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளாராம்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இயக்குநர் யார்? என்பது தெரியவில்லை. எனினும் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.