கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாதவன்

1 mins read
501303dc-94ee-4943-b9c6-50a2e65eb7e6
-

நடிகர் மாதவன் நடிப்பில் அண்மையில் வெளியான 'இறுதிச்சுற்று' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அப்படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றுக்குச் சென்ற மாதவனும் படக்குழுவினரும் அங்கு மாணவிகளிடம் 'இறுதிச்சுற்று' குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கும் மாதவன் பதிலளித்தார்.