கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கெளதம்

கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கெளதம்

1 mins read
9f53e3b4-9124-4c6b-8736-198a770c3d72
-

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் படம் 'முத்துராமலிங்கம்'. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராஜதுரை இயக்குகிறார். முதன்முறையாக கார்த்திக்கும் அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தில் கெளதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் "தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா" என்று தொடங்கும் பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.

மேலும் இப்படத்திற்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். 'முத்துராமலிங்கம்' படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் வாயிலாக பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இளையராஜா நாற்பது ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகிறார். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கமுத்து ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.