ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது 'பயம் ஒரு பயணம்'

ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது 'பயம் ஒரு பயணம்'

1 mins read
15405b19-341b-4653-acd9-6fec5e3d6654
-

ஆக்டோ ஸ்பெடர் புரொடக்‌ஷன் சார்பில் எஸ்.துரை, சண்முகம் தயாரிக்கும் படம் 'பயம் ஒரு பயணம்'. இதில் 'உன்னை போல் ஒருவன்' பரத், விசாகா சிங், மீனாட்சி தீட்சித், சிங்கம் புலி, ஊர்வசி, ஞானவேல், யோகி பாபு, லொள்ளு சபா மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மணிஷர்மா என்ற புது இயக்குநர் இயக்குகிறார். இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடந்து முடிந்தது. "மற்ற பேய் படங்களில் இருந்து 'பயம் ஒரு பயணம்' நிச்சயம் மாறுப்பட்டதாக இருக்கும். ரசிகர்களை முழுக்க முழுக்க பயமுறுத்தும். பயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக இது இருக்கும்.

இதய மருத்துவரும் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருமான பரத் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி விசாகா சிங் அழகான பேயாக நடிக்கிறார். "ஊர்வசி போன்ற வாழும் சாதனையாளருடன் பணியாற்றுவது எங்களைப் போன்ற புதிய கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். புதிய இசை அமைப்பாளர் ஒய்.ஆர். பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும்.