விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் கீர்த்தி

விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் கீர்த்தி

1 mins read
169126d4-ddc8-423c-883d-ee64c3dcfb55
-

விஜய் நடிப்பில் உருவாகும் 60ஆவது படத்தை 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 'துப்பாக்கி', 'ஜில்லா' ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வாலையே மீண்டும் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷ் வசம் சென்றுள்ளது. இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'ரஜினிமுருகன்' படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து தனு‌ஷுடன் இவர் நடித்து வரும் 'மிரட்டு' படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் கீர்த்தி சுரே‌ஷுக்கு விஜய் பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.