அபிராமி ராமநாதன்: தமிழும் சேலையும் அவசியம்

அபிராமி ராமநாதன்: தமிழும் சேலையும் அவசியம்

1 mins read
76d79e19-0403-4b6e-9c03-bb3facaf2ef3
-

'ஆகம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் இர்பான், தீக்சிதா, பெயப்பிரகாஷ், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. விழாவுக்கு இப்படத்தில் நடித் துள்ள நடிகைகள் கவர்ச்சி உடை யில் வந்திருந்தனர். இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமை யாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். "இப்போதெல்லாம் நிறைய புதுமுக நடிகர், நடிகைகள் திரையு லகுக்கு வருகிறார்கள். இந்தத் தொழிலுக்கு வந்தவர்களால் வேறு தொழிலுக்குப் போக முடியாது. மக்களின் கவலைகளை மறக்கச் செய்யும் தொழில் சினிமாதான்.

"சினிமாவை தூக்கி நிறுத்து வது பாடல்கள். தியாகராஜ பாக வதர் காலத்தில் ஒரு படத்தில் 24 பாடல்கள் வரை இருந்தன. 'ஆகம்' படத்தில் நடித்த நடிகை கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். தமிழ் தெரிந்தவர்களே ஆங்கி லத்தில் பேசுவது வருத்தமளிக் கிறது. நடிகைகள் தமிழில்தான் பேச வேண்டும். இந்த விழாவுக்கு நடிகைகள் எதையோ மாட்டிக் கொண்டு வந்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரையில் இதுபோன்ற திரைப்பட விழாக்களுக்கு நடிகை கள் சேலை கட்டி வரவேண்டும்.