ஜெய் நடித்த 'புகழ்' மார்ச் 18ஆம் தேதி வெளியீடு

ஜெய் நடித்த 'புகழ்' மார்ச் 18ஆம் தேதி வெளியீடு

1 mins read
e22bc75a-6e98-483f-b0c1-b598fceef345
-

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'புகழ்'. இதில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை 'உதயம் என்.எச்.4' படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். விவேக், மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் அதிரடி சண்டைகள் நிறைந்த காதல் படமாக உருவாகி இருக்கிறதாம். இப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. இப்போது மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.