தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அபிநயாவுக்கு குவியும் பாராட்டுகள்

2 mins read
27f850d3-49bb-47d5-823f-686de623bca0
-

'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேசாத, காது கேளாத மாற்றுத் திறனாளியானாலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் பேசுவது, பாடுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றாலும் அபிநயா துளியும் பதறுவதில்லை. ஏனெனில் சினிமா நடிப்புக்கான நுணுக்கங்கள் பலவற்றைக் குறுகிய காலத்திலேயே நன்கு கற்றுத் தேர்ந்து விட்டார். இவர் அடுத்து நடிக்கும் படம் 'அடிடா மேளம்'. அபய் கிருஷ்ணா தயாரித்து, நாய கனாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப் பிடிப்பின்போது அபிநயா கொடுத்த ஒத்துழைப்பு அபாரமாக இருந்தது என்கிறார் அபய். "திருமணப் பொருத்தம் பார்க்கும் நிறுவனம் நடத்து கிறார் நாயகன். அவனது தாய், தாய்மாமன் இருவரும் தரும் முட்டாள்தனமான ஆலோ சனைகளை நம்பி, அவற்றை அப்படியே செயல்படுத்துகிறான். "இம்மூவரும் செய்யக்கூடிய முட்டாள்தனமான காரியங்களால் ஒரு பெண் ணின் திருமணம் தவறாக நிச்சயிக்கப்படுகிறது.

"இந்த உண்மை தெரியவந்ததும், சம்பந்தப் பட்ட மூவரும் அந்தப் பெண்ணின் திருமணத்தை எப்படித் தடுத்து நிறுத்துகிறார்கள் என்பதே கதை. இதை கூடுமானவரை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறோம். "கதாநாயகி அபிநயா மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் காட்சிக்கு ஏற்ப நடிப்பதில் திறமையானவர். "சில காட்சிகளில் வசனம் அல்லது நடிப்பு தவறாக இருந்தால் உடனே அவருக்கு ஜாடைமாடையாகத் தெரியப்படுத்துவோம். இதற்காகவே ஒரு நடைமுறையை உருவாக்கி னோம். "அபிநயா சற்று தூரத்தில் இருந்தபடி நடித்தால், அவரை நோக்கி வெள்ளைத் துணியை ஆட்டுவோம். அப்படியானால் அந்தக் காட்சி எதிர்பார்த்தபடி சரியாக வந்துள்ளது என்று அர்த்தம். "ஒருவேளை சிவப்பு நிறத் துணியைக் காட்டி சிக்னல் கொடுத்தால், காட்சி சரியாக வரவில்லை என்று பொருள். ஆனால், அவரை நோக்கி சிவப்புக் கொடியைவிட வெள்ளைத் துணியைக் காண்பித்த தருணங்களே அதிகம்," என்கிறார் அபய் கிருஷ்ணா. இத்தகைய பாராட்டுகளால் மீண்டும் உற்சாக மாக நடித்து வருகிறார் அபிநயா.