மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது 'ஜீரோ'

மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது 'ஜீரோ'

1 mins read
5353d784-0d50-45f9-bea9-fc6f4d08cbb9
-

'மங்காத்தா' புகழ் அஸ்வின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஜீரோ'. இதில் அஸ்வினுக்கு ஜோடியாக 'நெடுஞ்சாலை' ‌ஷிவேதா நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ‌ஷிவ் மோஹா என்பவர் இயக்கியிருக்கிறார். தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் உருவான பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கின்றனர். மார்ச் 25ஆம் தேதி வெளியாகும். இது திகில் படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.