தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது ஜீவாவின் 'போக்கிரி ராஜா'

தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது ஜீவாவின் 'போக்கிரி ராஜா'

1 mins read
c3193634-9193-4993-b62c-329acc015bf9
-

ஜீவா நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் 'போக்கிரி ராஜா'. இதில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 'புலி' படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

400 திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இப்படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது போல படமும் கவரும் என்று எதிர்பார்ப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளர் 'புலி' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது அத்தகைய தடைகளை மீறி படம் வெளியாகிறது.