புதுமுக இயக்குநர்களை ஓரம்கட்டாமல் நம்பிக்கையோடு வரவேற்கும் மாதவன்

புதுமுக இயக்குநர்களை ஓரம்கட்டாமல் நம்பிக்கையோடு வரவேற்கும் மாதவன்

1 mins read
e93fca1c-2ca4-45cc-b294-cba34d41a933
-

லிங்குசாமி இயக்கிய 'வேட்டை' படத்திற்கு பிறகு தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து வந்தார் மாதவன். அதை யடுத்து, 'துரோகி' பட இயக்குநர் சுதா சொன்ன 'இறுதிச்சுற்று' கதையில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ஒரு இந்திப் படத்தில் நடிப்பதற்காகச் சென்று விட்டார். அதனால் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் படம் திரைக்கு வந்தது. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான அந்தப் படம் எதிர்பாராத பெரிய வெற்றி பெற்றது.

ஆனபோதும், அப்படத்தில் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாள ராக நடித்த மாதவனை விட குத்துச் சண்டை வீரராக நடித்திருந்த ரித்திகா சிங்கின் நடிப்பே அதிகம் பேசப்பட்டது. மேலும், அதையடுத்து தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்ட மாதவன், இனிமேல் தமிழுக்குத் தான் முதலிடம் கொடுப்பேன் என்று கூறினார். ஆனபோதும், தற்போது ஒரேயொரு தமிழ்ப் படத்தில்தான் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு, முன்பெல் லாம் புதுமுக இயக்குநர்களுக்கு சரியான மதிப்புக் கொடுக்காமல் ஓரம்கட்டி வந்த மாதவன், இப்போது யாராவது புதுமுக இயக்குநர்கள் தன்னிடம் கதை சொல்லத் தொடர்புகொண்டால், கதையைக் கேட்டுவிட்டு, "நல்ல தயாரிப்பாளராகப் பிடித்து வாருங் கள். நான் கண்டிப்பாக கால்‌ஷீட் தருகிறேன்," என்று அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைக்கிறாராம்.