சென்னை: தமக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான அவர், தாம் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். "சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவிற்காக கிராமம் தோறும் பிரசாரம் மேற்கொண்டு மக்களை விரைவில் சந்திப்பேன். கடவுள் எனக்கு நீண்ட ஆயுளைத் தருவார் என நம்புகிறேன்," என்று நடிகர் ஆனந்தராஜ் அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ்: நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்பாதீர்
1 mins read
-

