'மாப்ள சிங்கம்' படத்துக்காக அரசியல் களம் கண்ட அஞ்சலி

'மாப்ள சிங்கம்' படத்துக்காக அரசியல் களம் கண்ட அஞ்சலி

1 mins read
cd49ff3d-7347-4ff8-b3b7-d91ec7f6fa3c
-

சொந்த சித்தியுடனான பிரச்சினைக்குப் பிறகு மீண் டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஞ்சலி. வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், தேர்தல் களத்திலும் குதிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும். அவர் உண்மையான தேர்தல் களத்தில் இறங்கவில்லை. விமலுடன் இவர் நடித்து வரும் 'மாப்ள சிங்கம்' படத்தில்தான் அவருக்கு அப்படியொரு களம் அமைந்துள்ளது. இப்படத்தின் கதைப்படி கதாநாயகன் விமலுக்கு எதிராக இவரும் தேர்தல் களத்தில் இறங்குகிறாராம்.

'மாப்ள சிங்கம்' படத்தை ராஜசேகர் இயக்கி யுள்ளார். விமல், அஞ்சலி, சூரி, காளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 11ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வழக்கறி ஞரான அஞ்சலி, விமலுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிப்பதுபோன்ற காட்சி ஒன்று இடம் பெறுகிறதாம். இதில், அஞ்சலி வீர வசனங்கள் எல்லாம் பேசி அசத்தியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிகக் கவரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பிரதி அண்மையில் இணையத்தில் வெளியானது. எனினும் இதையும் மீறி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்.