தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுள்ள ஸ்ரீகாந்த்

1 mins read
7b1f9217-b58b-458c-bdab-dfcc7dbadc89
-

நடிகர் ஸ்ரீகாந்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கைகொடுத் துள்ள படம் 'சவுகார் பேட்டை'. இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரின் பாராட்டுதல் களையும் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து, இவர் நடித்துள்ள 'நம்பியார்' படத்தையும் பெரிதளவு நம்பியுள்ளார் ஸ்ரீகாந்த். 'நம்பியார்' படத்தில் நடித்ததோடு மட்டுமில் லாமல், அப்படத்தை தனது சொந்தக் செலவில் தயாரித்தும் இருக்கிறார் ஸ்ரீகாந்த். இப்படம் அவருக்குப் பெரிய அனுபவங்களைக் கொடுத்துள்ள தாம். அதிலும் தயாரிப்புப் பணி என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்ந்திருப்பதாகக் கூறுகிறார்.

"அடுத்து என் நடிப்பில் வெளியாக உள்ள 'நம்பியார்' என் சொந்தப் படம். இதுவரை சொல் லப்படாத கதை. ஒருவரிடம் உள்ள நல்ல, கெட்ட குணங்களே நம்பியார், எம்.ஜி.ஆர் குணங்க ளாகக் காட்டப்பட்டுள்ளன. "எல்லோருக்குள்ளும் இருக்கும் 'நம்பியார்' பற்றிச் சொல்கிற கதை இது. அந்த நம்பியார் குணத்தை அடக்கிக்கொண்டால் எம்ஜிஆர் ஆகலாம் என்பதே இப்படம் சொல்ல வரும் கருத்து. "நான் தயாரித்த இப்படத்தின் மூலம் பல நல்ல அனுபவங்கள் கிடைத்தன. சில பாடங்கள் படிக்க முடிந்தது. எல்லாவற்றையும் கடந்து விரைவில் படம் வெளியாகும்.