அபிநயா படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

1 mins read
83eebb92-15fa-4f9c-bd83-b464cd5c0898
-

'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவர் அபிநயா. இயல்பில் வாய் பேச முடியாத அவரை படம் நெடுக வாய் துடுக்கான பெண்ணாக நடிக்க வைத்திருப்பார் சசிகுமார். இப்படியொரு பெண்ணை அப்படியொரு கதா பாத்திரத்துக்குள் நினைத்துப் பார்த்ததே கற்பனைக் கும் எட்டாத விஷயம். அதையும் துல்லியமாக செய்த சசிகுமாரை எல்லா காலங்களிலும் பாராட்ட லாம். கற்பூரம் போல எந்த பாத்திரத்திலும் கரைந்து விடுகிற அபிநயாவும், வசனங்களைப் படித்து அதற் கேற்ப உதடுகளை அசைத்து பிரமிப்பூட்டி வருகிறார். போகட்டும், விஷயத்திற்கு வருவோம். இவர் நாயகியாக நடித்திருக்கும் அடிடா மேளம் என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. எனினும் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய முடியாதளவுக்கு ஒரு தடையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது தணிக்கை வாரியம். இந்தப் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம். அதுதான் பிரச்சினை.

"இப்படத்தில் துளிகூட ஆபாசம் இல்ல. வன்முறைக் காட்சிகளும் அறவே இல்ல. இருந்தும் ஏன் இப்படியொரு சான்றிதழ் அளித்தனர் என்பதே தெரியவில்லை," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் அன்பு ஸ்டாலின். மேல் முறையீட்டு குழுவிடம் மறுபரிசீலனைக்கான மனுவை அளிக்கலாமா என்றும் யோசிக்கிறார்களாம். அபய் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு மாற்றுத்திறனாளி அபிநயாவை மனதில் வைத்தாவது யு சான்றிதழ் அளிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

'அடிடா மேளம்' படத்தில் இடம்பெறும் காட்சியில் அபய் கிருஷ்ணா, அபிநயா