இரு நாயகிகளுடன் கலக்கும் யுவன்

இரு நாயகிகளுடன் கலக்கும் யுவன்

1 mins read
cc8f1528-39b3-47bc-a4ad-69e02932cb6e
-

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'என்று தணியும்'. சாதனா, ஜீவிதா என இரு நாயகிகள் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். "இது கௌரவ கொலை விவகாரத்தை மையப்படுத்தும் படம். பெற்ற மகளை பெற்றோர் கொல்வது போன்ற கௌரவ கொலைகள் இப்போது அதிகரித்து வருகின்றன. கௌரவ கொலையால் பாதிக்கப்படும் இளைஞன் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதை உணர்வுபூர்வமாகப் படமாக்கியுள்ளோம்," என்கிறார் இயக்குநர் பாரதி கிருஷ்ணா.