வாலிப ராஜா: விரைவில் திரை காண்கிறது

வாலிப ராஜா: விரைவில் திரை காண்கிறது

1 mins read
d7155df7-167e-411b-adf5-e22ab37647c9
-

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'வாலிப ராஜா'. இப்படத்தில் சந்தானம் மன நல மருத்துவராகவும் சேது வடிவமைப்பாளராகவும் விசாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகின்றனர். இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்‌ஷினி, சந்தானபாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. மேலும் பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ளார். இவர் கே.வி. ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

முழுநீள பொழுதுபோக்குப் படமாக உருவாகியிருக்கும் இப் படத்திற்கு ரதன் இசையமைத் திருக்கிறார். பணிகள் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகிறது. கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மார்ச் 25ஆம் தேதி கண்டிப்பாக திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.