மா.கா.பா. ஆனந்த் நாயகனாக நடிக்கும் 'அட்டி'

மா.கா.பா. ஆனந்த் நாயகனாக நடிக்கும் 'அட்டி'

1 mins read
a87ac7d8-ac73-4242-815d-d1904b32171d
-

மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் 'அட்டி'. கதாநாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். அதிலும் மீசை இல்லாமல் புதிய தோற்றத்தில் வருகிறாராம். இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், 'மகாநதி' சங்கர், யோகி பாபு, கலை, மிப்பு, தங்கதுரை ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். "சென்னையின் மையப்பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் அகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரசியமாக நகைக்சுவையுடன் விவரிக்கும் கதைக்களமே இப்படம். "இதில் மா.கா.பா.ஆனந்த் கானா பாடகராகவும் அஜீத் ரசிகராகவும் நடித்துள்ளார். கதாநாயகன் தன்னைச்சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை தனது நண்பர்கள் உதவியோடு எப்படி கையாளுகிறார் என்பதே கதைக் கரு," என்கிறார் விஜயபாஸ்கர்.