ஏப்ரல் முதல் தேதியன்று திரைகாண்கிறது 'என்னுள் ஆயிரம்'

ஏப்ரல் முதல் தேதியன்று திரைகாண்கிறது 'என்னுள் ஆயிரம்'

1 mins read
1fd1f3f7-f65a-464c-a427-fa6886683556
-

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் தயாரிக்கும் படம் 'என்னுள் ஆயிரம்'. இதில் டெல்லி கணே‌ஷின் மகன் மகா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மரீனா நடித்திருக்கிறார். இப்படத்தை ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகன் மகா நட்சத்திர தங்கு விடுதியில் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். நாயகி மரீனா வங்கியில் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். மகாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையப்படுத்தி திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர். இப்படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். அண்மையில் இப்படத்தின் முன்னோட்டத்தை மாதவன் வெளியிட்டார். இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி இப்படம் திரை காண உள்ளது.