விஜயகாந்த் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை: சிங்கமுத்து புகார்

விஜயகாந்த் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை: சிங்கமுத்து புகார்

1 mins read
587c4cf8-ad90-48b5-80ef-efe51e9c8e78
-

சென்னை: விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரியுமா எனத் தெரியவில்லை என அதிமுக பேச்சாளரும் நடிகருமான சிங்கமுத்து கூறியுள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், தனது தொகுதி மக்களுக்காக விஜயகாந்த் எதுவுமே செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார். "விஜயகாந்த் இன்னும் சினிமாவில் இருந்தே வெளியே வரவில்லை. கட்சி ஆரம்பித்த பத்து ஆண்டுகளில் அவர் மக்கள் பணி என்று எதைச் செய்தார்? ஒன்றும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் ஆசை மட்டும் விஜயகாந்துக்கு இருக்கிறது. ஆனால் அது நிறைவேறாது," என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடுமையாக உழைத்து முதல்வர் பதவியைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேச முடியும் என்பதற்காக குஷ்பு போன்றவர்கள் முதல்வர் குறித்து எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்றார்.