'பூமணி', 'பூந்தோட்டம்', 'கிழக் கும் மேற்கும்', 'கருங்காலி' உள் ளிட்ட படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் அஞ்சலியை கதாநாயகி யாக வைத்து 'ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பில் களஞ்சியத்துக் கும் அஞ்சலிக்கும் மோதல் ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து அஞ்சலி வெளியேறி விட்டார். இதனால் அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்ற அமைப்புகளில் களஞ்சியம் புகார் செய்தார். அஞ்சலி நடிக்க மறுப்பதால் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் 20 நாட்கள் ஒதுக்கி தனது படத்தில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார் களஞ்சியம். ஆனால் அஞ்சலி பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அஞ்சலி நிச்சயம் நடிப்பார்: காத்திருக்கும் மு.களஞ்சியம்
1 mins read
-

