கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் புதிய படத்தை கே.வி.ஆனந்த் இயக்க, நாயகனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இவர்களுடன் டி.ராஜேந்தரும் கைகோர்த்துள்ளார். 'அனேகன்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 18ஆவது படம் இது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
1 mins read
-

