உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அன்னரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. தொழிலதிபரான வேலாயுதம் சுதர்சன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் தயாரித்தார். சிவாஜி கணேசன் நடித்த ராமன் எத்தனை ராமனடி, கே.ஆர்.விஜயா நடித்த தீர்க்க சுமங்கலி, நம்ம வீட்டுத் தெய்வம், கஸ்தூரி விஜயம், மேயர் மீனாட்சி, வாயாடி, திருடி, சூதாட்டம் உள்பட தமிழ் மற்றும் மலையாளப் படங்களையும் தயாரித்தார்.
கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் காலமானார்
1 mins read
-

