அசத்தல் பாடல்களுடன் வருகிறது 'அட்ரா மச்சான் விசிலு'

அசத்தல் பாடல்களுடன் வருகிறது 'அட்ரா மச்சான் விசிலு'

1 mins read
73d51844-dba5-429c-b154-48db444ce5cf
-

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, சென்ராயன் மற்றும் நைனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அட்ரா மச்சான் விசிலு'. இப்படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களைக் கேட்ட ஈராஸ் நிறுவனத்தினர் பெரிய விலை கொடுத்து பாடல்களின் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் இந்தப்படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் ரசிகர்கள் மனம் கவர்ந்த பாடல்களாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.