'துப்பறிவாளன்' விஷால்

'துப்பறிவாளன்' விஷால்

1 mins read

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'மருது'. இப்படத்தை 'கொம்பன்' முத்தையா இயக்கி இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன்' படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார் விஷால். இப்படத்திற்குப் பிறகு 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை', 'அலெக்ஸ் பாண்டியன்', 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் விஷாலுக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'கத்திச்சண்டை' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.