கார்த்திக்கு குவியும் பாராட்டுகள்

கார்த்திக்கு குவியும் பாராட்டுகள்

1 mins read
927e06a9-29bd-4427-aeea-c00efbd30ad2
-

தமிழ்ப் பட உலகில் பேசப்படும் நாயகனாக இருக்கும் கார்த்திக்கு 'தோழா' படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படம் தெலுங்கில் 'ஊப்பரி' என்ற பெயரில் வெளியானது. கார்த்தி நடித்த படங்கள் ஏற்கெனவே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும், அவர் நேரடியாக தெலுங்கில் நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்துக்கு தெலுங்கு ரசிகர்களும் மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு ஊடகங்கள் கார்த்தியை மிகவும் பாராட்டியுள்ளன. நாகார்ஜுனாவை விட கார்த்தி நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனராம். சூர்யாவும் தனது தம்பியைப் பாராட்டி இருக்கிறார். இதன் மூலம் கார்த்தி தெலுங்கு ரசிகர்கள் மனதில் முக்கிய நாயகனாக இடம் பிடித்திருக்கிறார். 'தோழா' படத்தின் மூலம் கார்த்தியும் கமலுக்கு அடுத்த இடத்தை தொட்டுவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.