சேரன் இயக்கத்தில் உருவான படம் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தை தமிழ், தெலுங்கில் சேரனே தயாரித்திருந்தார். சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சந்தானம், பிரகாஷ் ராஜ், ஜெயபிரகாஷ், மனோ பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சினிமா டூ ஹோம்' (C2H) என்ற புதிய யுக்தி மூலம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக டிவிடி மூலம் வெளியிட்டார் சேரன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது இப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார் சேரன்.
சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை'.
1 mins read
-

