படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகரானார்

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகரானார்

1 mins read
7e19d8cf-1de7-478c-a5d4-bfbb67c9dec4
-

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவருக்கு யோகம் அடித்ததில் நடிகரானார். 'விலாசம்' படத்தை இயக்கிய பா. ராஜகணேசன் தற்போது 'முதல் தகவல் அறிக்கை' என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் ராயன், கல்பனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராஜ பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார். ரவிராகவ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் அருகே உள்ள மன்னார்குடியில் நடந்தது.

அப்போது அதனை வேடிக்கை பார்க்க வந்தவர் முஜீப். அவர் அசப்பில் கிஷோர் சாயலில் இருந்தது இயக்குநருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உடனே அவருக்கு போலிஸ் வேடத்தைக் கொடுத்து நடிகராக்கிவிட்டார்.

முஜீப் பலமுறை நடிப்பு வாய்ப்பு தேடியதும், அது கிடைக்காமல் வெளிநாட்டு வேலைக் குச் சென்றதும் அதன் பிறகுதான் தெரிய வந்தது. படத்தின் கதையைக் கேட்ட முஜீப் தானே படத்தைத் தயாரிப்பாதாகவும் கூறிவிட்டார். இயக்குநருக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலாகிவிட்டது. புதிய தயாரிப்பாளர் கிடைத்த சந்தோஷத்தில் படப்பிடிப்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் இயக்குநர் பா.ராஜகணேசன்.