"நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பிற்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக் கலாம். பந்தயத்தில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. தெலுங்கு திரையுலகில் என்னை எப்போதும் ஒரு கவர்ச்சி பொம்மையைப் போல்தான் பார்க்கிறார்கள். நல்ல கதாபாத்திரம் என்று எதுவும் இதுவரை அமையவில்லை. 'பக்கத்து வீட்டு பெண் மாதிரி' என்று சொல்லும் வகையிலான கதாபாத்திரங்கள் இந்தித் திரைப்படங்களில் எனக்கு கிடைக்கிறது. அதனால்தான் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
டாப்சி: எனக்கு எண்ணிக்கை முக்கியமல்ல
1 mins read
-

