கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவனைப் புடி'

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவனைப் புடி'

1 mins read
cbc67a09-c2e1-4506-8579-d61def87799e
-

ஒரே சமயத்தில் தமிழ், கன்னட மொழிகளில் உருவாகி வரும் படம் 'முடிஞ்சா இவனைப் புடி'. கன்னட முன்னணி நடிகர் சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்த் திரைப்படம் இது. கதாநாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.பி.பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். டி.இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தில் மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படத்தின் கதையை டி.செல்வக்குமார் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜரத்தினமும், படத் தொகுப்பாளராக பிரவீன் ஆண்டனியும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் வில்லன்களாக முகேஷ் திவாரி, சரத் லோஹித்சுவா நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், நாசர், டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி, சிக்கன்னா, கெளதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெங்களூரு, சென்னை, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இரு மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இப்படம் இருக்கும் என்கிறார் ரவிக்குமார்.