வித்தியாசமான வேடத்தில் நிக்கி

வித்தியாசமான வேடத்தில் நிக்கி

1 mins read
2059b1c5-4406-4021-8df0-d76b65d64fab
-

'டார்லிங்', 'யாகாவாராயினும் நாகாக்க' படத்துக்குப் பிறகு நிக்கி கல்ராணியை தமிழில் காணோம். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்திருக்கும் 'கோ 2' மிக விரைவில் வெளியாக உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனை பிபிசி நிருபர் ஃபராஸ் எடுத்த புகழ்பெற்ற பேட்டிதான் பல அரசியல் திருப்பங்களுக்கு காரணமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்ச் சினிமாவில் வெற்றிப் படங்கள் உருவாகி இருக்கின்றன.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெற்றி பெற்ற 'கோ' இதன் பின்னணியிலான ஒரு கதை எனலாம். இப்படத்தை தயாரித்த எல்ரெட் குமார், ஜெயராமன் அடுத்து 'கோ 2' படத்தை தயாரிக்கின்றனர். சரத் இயக்குகிறார். பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி நடித்திருக்கின்றனர். இதுபற்றி நிக்கி கல்ராணி கூறும்போது, "பாபிக்கும் எனக்கும் வித்தியாசமான வேடங்கள் அமைந்துள்ளன. இப்படத்தில் நடித்தது எனக்குப் புதிய அனுபவமாக அமைந்தது," என்கிறார்.