படப்பிடிப்பில் காயமடைந்த ஐஸ்வர்யாராய்

படப்பிடிப்பில் காயமடைந்த ஐஸ்வர்யாராய்

1 mins read

நடிகை ஐஸ்வர்யாராய் இந்திப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக தயாராகிறது. சரப்ஜித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர். பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று சந்தேகித்து இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இந்தச் உண்மை சம்பவத்தின் பின்னணியில் திரைப்படம் தயாராகிறது. இதில் சரப்ஜித் கதாபாத்திரத்தில் ரந்திப் ஹோடாவும் அவரது சகோதரி தல்பிர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராய் உடல் கருத்து, இளைத்து, அதிக மெனக்கெடலுடன் கிராமத்துப் பெண்ணாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சண்டை காட்சியொன்றைப் படமாக்கி உள்ளனர். வில்லன்கள் துரத்த ஐஸ்வர்யா ராய் தப்பித்து ஓடுவது போல் இந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யாராய் திடீரென கால் இடறி கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஓய்வெடுத்து வருகிறாராம்.