யதார்த்தமான கதையுடன் தயாராகும் படம் - 'ஜெனிபர் கருப்பையா'

யதார்த்தமான கதையுடன் தயாராகும் படம் - 'ஜெனிபர் கருப்பையா'

1 mins read
c194f17b-cd34-4f85-95db-bef34a7a1fe2
-

டி.எஸ். வாசன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஜெனிபர் கருப்பையா'. கதாநாயகியாக மிருதுளா விஜய் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கபூர், ரோகினி, பாத்திமா பாபு, செவுந்திரபாண்டி, மாஸ்டர் பரணி, சிவாஜி, ராஜ்முரளி ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவின் தம்பி கோட்டா சங்கர் ராவ் இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார். கதை, திரைக்தை, வசனம் எழுதி இயக்குபவர் ஜி.எம்.சரவணபாண்டி. இவர் 'தலைமுறை' படத்தை இயக்கியவர். "நிரந்தரமான வேலையில்லாமல் வாழ்க்கையைச் சந்தித்துக் கொண்டிருக்கும், சாதாரண நிலையிலுள்ள ஒருவருக்கு வாழ்க்கை வசதிகள் பெருகும் பொழுது அவரது மனநிலை எவ்வாறு மாறுகிறது என்பதை எடுத்துக் கூறும் யதார்த்தமான கதை இது," என்கிறார் சரவணபாண்டி.