தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிக்கூடம் கட்டும் லாரன்ஸ்

1 mins read
0559028f-aa4c-45d1-9642-57e43770ad13
-

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்க சொந்தமாகப் பள்ளிக்கூடம் கட்ட அதற்கான பணிகளைத் தொடங்கியிருக் கிறார். லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

அவரது அறக்கட்டளை மூலம் 60 குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளைத் தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனது அறக்கட்டளைக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டு கிறார்.