நிக்கியை நிற்காமல் ஆட வைத்த லாரன்ஸ்

1 mins read
1a3fe561-99be-46f9-938f-8a8d4cc7a4e2
-

லாரன்ஸ் தற்­பொ­ழுது 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்­தில் நடித்­துக்­கொண்­டி­ருக்கிறார். அந்தப் படத்­தில் அவ­ருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்­கிறார். அவரை ஒரு பாடலில் நிற்க விடாமல் ஆட வைத்­தி­ருக்­கிறா­ராம் லாரன்ஸ். பிர­பு­தேவா, லாரன்ஸ் போன்ற நடன இயக்­கு­நர்­களு­டன் நடிப்­ப­தில் சிரமம் என்னவென்றால் கடின­மான நடன அசை­வு­களை வைத்து கதா­நா­ய­கிகள் ஓய்ந்து போகும் அள­விற்கு அவர்­களை ஆட வைத்­து­வி­டு­வார்­கள். இவர்­களின் படங்களில் ஆடினால் பிறகு ருத்­ர­ தாண்ட­வ­மும் இல­கு­வா­கி­ வி­டும். படத்­துக்­குப் படம் கடினமான வித்­தி­யா­ச­மான நடன அசை­வு­களை முயற்சி செய்யும் லாரன்ஸ், நாய­கிகளை­யும் அதேபோல் ஆடும்படி செய்து விடுவார். முன்பு டாப்சியை ஒரு பாடலுக்காக நான்கு நாட்கள் ஆட வைத்தாராம். அதுபோல் இந்தப் படத்தில் நிக்கியை ஆட வைத்திருக்கிறார் லாரன்ஸ்.

இந்தப் படத்­தில் "அல்­லா­கிட்ட போனா அன்பா இருக்­க­ணும், ஜீசஸ் கிட்ட போனா பாசமா இருக்­க­ணும், ஏழு­மலை­யான் கிட்ட போனா நேர்மையா இருக்­க­ணும். இந்தச் சிவா­கிட்ட வந்தா நல்­ல­வனா மட்­டும்­தான் இருக்­க­ணும், இல்­லேன்னா செத்துப் போய்டுவ" என்று நீளமான பஞ்ச் வசனம் ஒன்றை­யும் லாரன்ஸ் பேசி­யி­ருக்­கிறார்.