நடிகராக விரும்பிய எஸ்.ஜே. சூர்யா இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.

நடிகராக விரும்பிய எஸ்.ஜே. சூர்யா இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.

1 mins read

சூர்யா, இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இறைவி' படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநராக வெற்றி பெற்றுள்ள இவர் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்ததாகக் கூறுகிறார். விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி நடித்த 'இறைவி' படம் விரைவில் திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத் திருக்கிறார். 'இறைவி' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது எஸ்.ஜே. சூர்யாவின் பேச்சு சுவாரசியமாக அமைந்தது.

"நான் நடிகர் ஆகும் கனவில் தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர் பாராத விதமாக 'வாலி', 'கு‌ஷி' படங்களை இயக்க வாய்ப்பு கிடைத் தது. இதனால் இயக்குநர் ஆனேன். "அதன் பிறகு 'நியூ', 'வியாபாரி', 'இசை' உள்பட சில படங்களில் நடித்தேன். இப்போது 'இறைவி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித் திருக்கிறேன்.

'இறைவி' படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி.