அதர்வா ஜோடியாக வங்காள நடிகை

அதர்வா ஜோடியாக வங்காள நடிகை

1 mins read
4358c63f-1bf0-4bf2-bf97-abd220d46115
-

அதர்வா நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வங்காள நடிகை நடிக்க இருக்கிறார். 'பாணா காத்தாடி' மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் அதர்வா. இயக்குநர் பாலாவின் 'பரதேசி' படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. அண்மையில் அதர்வா நடிப்பில் வெளியான 'ஈட்டி', 'கணிதன்' ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றன. இப்போது 'ருக்குமணி வண்டி வருது' படத்தில் நடித்து வருகிறார் அதர்வா.

அடுத்து இவரே சொந்தமாகத் தயாரிக்கும் படத்துக்கு 'செம போத ஆகாத' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு நாயகிகளுடன் நடிக்கிறார். அவர்களில் ஒருவர் வங்காள நடிகை மிஷ்டி. இன்னொருவர் அனைகா. இவர் வசந்தபாலன் இயக்கிய 'காவியத் தலைவன்' படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தவர். வித்தியாசமான கதை என்பதால் தனது சொந்தப் படத்துக்கு வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறாராம் அதர்வா. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.