நட்சத்திர கிரிக்கெட்: சூர்யா அணி வெற்றி

நட்சத்திர கிரிக்கெட்: சூர்யா அணி வெற்றி

1 mins read
318bcfed-00fe-4ff1-84d4-7f7f23b086da
-

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென சொந்தக் கட்டடம் கட்டு வதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னையில் நேற்று முன்தினம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி யில் சூர்யா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று முன்தினம் காலை பத்து மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதா னத்தில் இந்தப் போட்டி நடை பெற்றது. இப்போட்டியை நடிகர் கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய எட்டுப் பேரின் தலைமை யில் எட்டு அணிகள் போட்டியில் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.